இங்கிலாந்தில் லண்டனில் நடந்த ‘ஐடியாஸ் ஃபார் இந்தியா’ மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மீது வழக்கம்போல தனது சொந்த நாட்டின் மீதே தரம் தாழ்ந்த தாக்குதலை நடத்தினார். ‘நான் ஐரோப்பாவில் இருந்து சில அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன், அவர்கள் இந்திய வெளியுறவு சேவை முற்றிலும் மாறிவிட்டது. அவர்கள் எங்கள் பேச்சு எதையும் கேட்பதில்லை. அவர்கள் திமிர் பிடித்தவர்கள். அவர்கள் மத்திய அரசின் உத்தரவுகளை மட்டுமே பின்பற்றுகின்றனர், எங்களை கண்மூடித் தனமாக ஆதரிப்பதில்லை என்று கூறினர்’ என குற்றம் சாட்டிய ராகுல், ‘இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் செய்வது தவறு’ என்று கூறினார். இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘ஆம், இந்திய வெளியுறவுத்துறை மாறிவிட்டது. ஆம், அவர்கள் அரசின் உத்தரவை பின்பற்றுகிறார்கள். ஆம், அவர்கள் மற்றவர்களின் வாதங்களை எதிர்க்கிறார்கள். ஆனால், இது திமிர் அல்ல, இது நம்பிக்கை. மேலும் இது தேசிய நலனைப் பாதுகாப்பது’ என பதில் அளித்தார்.