பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் புர்கா போன்ற ஆடைகள் அணிவதை தடை செய்யவேண்டுமென்ற சட்டத்தை ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில் முன்னெடுத்துள்ளது. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 5.5 சதவிகிதமாக உள்ள முஸ்லிம்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக பொதுவாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. சுமார் ஒரு ஆண்டுகாலம் நடந்த விவாதங்களுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்யவேண்டுமென்ற நகர்வுக்கு 51.2 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனவே கூடிய விரைவில் இத்தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிகிறது.