கொள்முதல் சாதனை

நடப்பு ரபி பருவ விவசாய பொருட்கள் சந்தைப்படுத்தல் சீசனில் கோதுமை உற்பத்தி செய்யும் பெரும்பாலான மாநிலங்களிலிருந்து 433.32 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது முன்பு 389.92 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. இதனால் சுமார் 49.15 லட்சம் விவசாயிகள் ரூ. 85,581.39 கோடியை நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கில் பெற்று பலன் அடைந்துள்ளனர். இதேபோல, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து காரீப் பருவ அறுவடையான 108.42 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு பருப்பு, எண்ணெய் வித்துக்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு 1.74 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு கொப்பரை தேங்காய் வாங்குவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மத்திய அரசு அறிவித்த புதிய வேளாண் சட்டங்களால் மட்டுமே சாத்தியமானது என்பது கண்கூடு.