முன்னாள் பிஹார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீது ஊழல் குற்றத்திற்காக பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்தது. அதில் 4 வழக்குகளில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பு சி.பி.ஐ நீதிமன்றம் விசாரித்த 5வது வழக்கிலும் லாலு குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. அதற்கான தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், 5 வருட சிறை தண்டனையுடன் ரூ. 60 லட்சம் தண்டனைத் தொகையாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.