நடப்பு காரீஃப் பருவத்தில் பயிரிடப்படும் துவரை, உளுந்து, பாசிப்பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் விளைச்சலை அதிகரிக்க பருப்பு விதைகள் அடங்கிய சுமார் 20 லட்சம் பைகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரூ. 82 கோடி மதிப்பிலான இவை மத்திய மாநில அரசின் முகவர்கள் மூலமாக வழங்கப்படும். இவற்றை ஊடுபயிராகவும் தனிப்பயிராகவும் பயிரிடலாம். வரும் ஜூன் 15க்குள் இவை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பருப்பு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த பைகள் மத்திய அரசால் இலவசமாக வழங்கப்படுவதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.