கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் விசித்திரமான திருட்டு நடந்துள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ‘பத்தனாபுரம் பேங்கர்ஸ்’ என்ற தனியார் நிதி நிறுவனத்தில் திருட்டு நடந்துள்ளது. இரண்டு லாக்கர்களில் வைக்கப்பட்டிருந்த 100 சவரன் தங்கம் மற்றும் பணம் காணாமல் போனதாக அதன் உரிமையாளர் ராமச்சந்திரன் நாயர் காவல்துறையில் புகார் அளித்தார். குற்றம் நடந்த இடத்தை காவலர்கள் ஆய்வு செய்தபோது 30 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் செல்வதற்கு முன், கொள்ளையர்கள் அங்கு பூஜைகள் செய்து கொள்ளையடித்துள்ளது தெரியவந்துள்ளது. தமிழர்கள் வழிபடும் கருப்பண்ணசாமியின் படம், மூன்று பிளாஸ்டிக் வாழை இலைகள், எலுமிச்சை பழத்தில் குத்தப்பட்ட சூலம், அகல் விளக்கு, சாராய பாட்டில், வெற்றிலை பாக்கு போன்ற பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த சுவாரஸ்யமான கொள்ளை சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.