மதமாற்றம் செய்யும் ஆசிரியர்

ஆர்க்கிட்ஸ் சர்வதேச பள்ளி செயின்ட் தெரசா கல்வி கலாச்சார மற்றும் சமூக மேம்பாட்டு சங்கத்தின் கீழ் இயங்குகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் பள்ளிகளை நடத்துகிறது. பெங்களூருவில் உள்ள இப்பள்ளியின் ஆசிரியர் 2ம் வகுப்பு சரிகா ராணா என்ற கணித ஆசிரியர், அங்கு பயிலும் ஹிந்து மாணவர்களை படிப்பு, கணிதம் நன்றாக வர,  அல்லாவிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என கூறி, மதமாற்றம் செய்யும் நோக்கில் முஸ்லிம் மத வழக்கப்படி தொழுகை செய்ய கற்றுக் கொடுத்துள்ளார். இதுகுறித்த ஒரு குழந்தையின் புகாரின் பேரில், அவரது பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்தனர். அதற்கு அப்பள்ளி நிர்வாகம் இது குறித்து முறையாக குழந்தைகளிடமும் ஆசிரியரிடமும் விசாரணை நடத்தவில்லை. இது கண்களுக்கான பயிற்சி என ஒரு பொய்யான காரணத்தை கூறியது. மேலும், பெற்றோர் பொய் புகார் அளிப்பதாகவும் குற்றம் சுமத்தியது. இதுகுறித்து அறிந்த சட்ட உரிமைகள் அமைப்பான எல்.ஆர்.பி.எப், அப்பெற்றோரிடம் இதுகுறித்து விசாரித்து அந்த தகவல்களை குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்திற்கு (என்.சி.பி.சி.ஆர்) அனுப்பி வைத்துள்ளது.