மகாராஷ்டிராவில் மதமாற்ற தடைச்சட்டம்

பாரதத்தில் சமீபகாலமாக ஹிந்து பெண்களை ஏமாற்றி மோசடி செய்து அவர்களை திருமணம் செய்து மதம் மாற்றுவது, கொலை செய்வது உள்ளிட்ட லவ் ஜிஹாத் சதி செயல்கள் அதிகம் நடைபெற்று வருவதாக பல்வேறு ஹிந்து அமைப்புகள் குற்றம் சாட்டு வருகின்றன. சில மாநிலங்களில், இதுபோன்ற கட்டாய, சட்டவிரோத மதமாற்றங்களை தடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மா, ஷீசன் கான் என்ற தனது சக நடிகரை காதலித்து ஏமாந்ததால் தற்கொலை செய்துக்கொண்டார். இந்த தற்கொலையும் லவ் ஜிஹாத் முயற்சி என்ற சர்ச்சையை கிளப்பி உள்ளது. அவர்களின் காதல் முறிவே இந்த தற்கொலைக்கு காரணம் என்பதும் விசாரணையில் உறுதியானது. இதையடுத்து காவலர்கள் ஷீசன் கானை கைது செய்தனர். நடிகை துனிஷா சர்மாவின் தற்கொலைக்கு பின்னாலும் மதமாற்ற முயற்சி இருப்பாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சூழலில், மகாராஷ்டிர கிராம வளர்ச்சித்துறை அமைச்சரான கிரிஷ் மகாஜன் அளித்த ஒரு பேட்டியில், தொலைக்காட்சி தொடர் நடிகை துனிஷா ஷர்மாவின் மரணம் லவ் ஜிகாத் சம்பந்தப்பட்டது. காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாங்கள் பார்த்து வருகிறோம். இதற்கு எதிராக கடுமையான சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என கூறினார். முன்னதாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மற்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ‘லவ் ஜிஹாத்’ சட்டங்களை ஆய்வு செய்து மகாராஷ்டிராவிலும் அதேபோன்ற சட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.