செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்ற ஆன்லைன் ரேபிட் சென்ஸ் என்ற அதிவேக செஸ் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் கலந்துகொண்டு இணைய வழியில் செஸ் போட்டியில் ஆடி வருகின்றனர். நேற்று நடந்த 5வது சுற்றில், சென்னையை சேர்ந்த 16 வயதே நிரம்பிய இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, நார்வேயை சேர்ந்த உலக சாம்பியனும், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மேக்னஸ் கார்ல்சன்னை எதிர் கொண்டார். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 40வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் ஆன்லைன் வாயிலாக நடந்த ஏர் திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் 8வது சுற்றில் இதே கார்ல்சனை பிரக்ஞானந்தா தோற்கடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.