போரிஸ் ஜான்சன் பாரதம் வருகை

கடந்த ஜனவரியில் குடியரசு தின விழாவில் கலந்துக்கொள்ள பாரதம் வருவதாக இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் வருகை கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் வரும் ஏப்ரல் மாதம் பாரதம் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமாரக அவர் பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொண்ட முதல் முக்கிய பயணமாகவும், இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய முதல் பெரிய சர்வதேச பயணமாகவும் இது கருதப்படுகிறது. மேலும், வரும் ஜூன் மாதத்தில் ஜி-7 தலைவர்களின் கூட்டத்தை நடத்துவதற்கு முன்பாக ஜான்சன் தனது பாரத பயணத்தை மேற்கொள்வதும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி-7 உச்சி மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொள்ள உள்ளதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம், 11 நாடுகளின் கூட்டணியான டிரான்ஸ்-பசிபிக் கூட்டமைப்பிற்கான விரிவான மற்றும் முற்போக்கான ஒப்பந்தத்தில் (சி.பி.டி.பி.பி) சேரவும், ஆசிய நாடுகளின் ‘ஆசியான்’ அமைப்பில் இணையவும் பிரிட்டன் கோரிக்கையை விடுத்திருந்தது. இதற்கு பாரதத்தின் ஆதரவைப்பெற போரிஸ் ஜான்சன் முயல்வதால் இந்த வருகை அதிக முக்கியத்துவம் பெருகிறது.