விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள அமைச்சர் பொன்முடியின் தொகுதிக்கு உட்பட்ட சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரித்து, புதிதாக டி.எடப்பாளையம் ஊராட்சியை உருவாக்க வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆகவே, உள்ளாட்சி நாளையொட்டி நடந்த கிராமசபை கூட்டத்தை அந்த கிராம மக்கள் புறக்கணித்தனர். கடைகளை அடைத்து உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிடும்படி வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அந்த கிராம மக்களை சமாதானப்படுத்துவதற்காக அங்கு சென்ற தி.மு.க அமைச்சர் பொன்முடி, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, அவரை முற்றுகையிட்ட கிராமமக்கள் கேள்விகளை எழுப்பினர். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி, எதிர்த்து கேள்வி கேட்ட ஒருவரை பார்த்து, ‘போடா மயி… என்று தகாத வார்த்தையை பயன்படுத்தி ஒருமையில் திட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்களிடம் சிறிதும் கன்ணியம் காக்காத இவரை போன்றவர்கள் மீது திராவிட மாடல் முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?