பி.எப்.ஐ பயங்கரவாதம்

கர்நாடக மாநிலம் உப்பினங்கடி சுப்ரமணிய கிராஸ் அருகே டிசம்பர் 6ம் தேதி இரவு, மோகன் தாஸ், அவரது சகோதரர் அசோக் ஆகியோர் மீன் விற்றுக் கொண்டிருந்தனர். திடீரென அங்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் காரில் வந்திறங்கிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) பயங்கரவாத ஆதரவு அமைப்பை சேர்ந்த 25 முஸ்லிம் இளைஞர்கள், வாள்கள் மற்றும் கம்பிகளால் அவர்களை தாக்கினர். இதனால் அந்த சகோதரர்கள், அவர்களிடம் மீன் வாங்கியவர்கள் பலத்த காயமடைந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த காவல்துறை, முக்கிய குற்றவாளியான முகமது சினான் உட்பட சிலரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றது. உடனே காவல் நிலையத்தில் திரண்ட பி.எப்.ஐ கும்பல், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். பிற்பகலில் பி.எப்.ஐ மாவட்டத் தலைவர் ஹமீதை காவல்துறை விடுவித்தது. பி.எப்.ஐ அமைப்பினர், இதனை ‘வெற்றி ஊர்வலம்’ நடத்தி கொண்டாடினர்.

மீண்டும், 144 தடை உத்தரவையும் மீறி இரவு 9 மணியளவில் காவல் நிலையத்திற்கு வெளியே கூடிய அவர்கள், காவல்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் பயங்கர ஆயுதங்களுடன் காவல் நிலையத்திற்குள் நுழைந்து காவலர்களை தாக்கினர். கும்பலை கலைக்க தடியடி நடத்தப்பட்டது. பதிலடியாக ஆம்புலன்சில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்கள், காலி சோடா பாட்டில்களை எடுத்துவந்து காவலர்களை மூர்கமாக தாக்கினர் பி.எப்.ஐ அமைப்பினர். இதில் டி.எஸ்.பி உட்பட 9 காவலர்கள் படுகாயம் அடைந்தனர். பின்னர் அந்த கும்பல், அருகிலுள்ள மசூதிக்குள் ஓடி ஒளிந்துகொண்டு அங்கிருந்து கற்களால் தாக்குதல் நடத்தியது. இந்த கலவரத்தால் பொதுசொத்துகளும் சேதமடைந்தன.

தாக்குதல் நடத்த ஆம்புலன்ஸ், ஒளிந்துகொள்ள மசூதியி என்பது தொழில்முறை பயங்கரவாதக் குழுக்களின் அடையாளங்களில் ஒன்று. ஆம்புலன்சை காவல்துறை அதிகமாக சோதனை செய்யாது என்பதால் அவர்களால் அது, ஆயுதக் கடத்தல் உட்பட பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மசூதிக்குள் நுழைய காவல்துறை யோசிக்கும். மீறி நுழைந்தால் மத நிந்தனை, தாக்கலுக்கு உள்ளாகும் சிறுபான்மையினர் என விசயத்தை திசை திருப்பி விடலாம் என்பது பயங்கரவாதிகளின் தந்திரம்.