நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ‘ஏப்ரல் 1, 2020 முதல் மார்ச் 31, 2021 வரையிலான காலகட்டத்தில் நுகர்வோர் செலுத்தும் பெட்ரோல் விலை சீராக உள்ளது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகள் அனைத்தும் பெட்ரோல் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளன. ஆனால் பாரதத்தில் வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. அதில் நாம் சந்தோஷப்பட வேண்டும். மாறாக ஏன் விலை உயர்ந்தது என்று கேள்வி கேட்கிறோம். மத்திய அரசு 2021 நவம்பர் 4 அன்று பெட்ரோல், டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே லிட்டருக்கு ரூ.5 மற்றும் ரூ.10 குறைத்தது. ஆனால் தமிழகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற ஒன்பது மாநிலங்கள் இன்னும் வாட் வரியைக் குறைக்கவில்லை. அம்மாநிலங்கள் அதுகுறித்து சிந்திக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த தேவையான மற்ற நடவடிக்கைகளையும் ஆராய மத்திய அரசு தயாராக உள்ளது’ என தெரிவித்தார். மேலும், கச்சா எண்ணெயை ரஷ்யா தள்ளுபடி விலையில் வழங்குவது, வெனிசுலா, ஈரான் நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது என அனைத்து சந்தர்ப்பங்களையும் மத்திய அரசு ஆராயும். எண்ணெய் உற்பத்தி நாடுகளும் தங்கள் உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளன. இவை இறுதி செய்யப்பட்டவுடன் விவரங்கள் தெரிவிக்கப்படும்’ என்றார்.