திருப்பூர் வேலம்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்த பொதுமக்கள், இந்து முன்னணியிடம் உதவி கேட்டு அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்திடம் மனுஒன்றை அளித்துள்ளனர். அதில், தங்களது பகுதியில் நூறு விழுக்காடு ஹிந்துக்கள் மட்டுமே வசித்து வருவதாகவும் அங்கு திடீரென சில முஸ்லிம்கள் ஒரு கட்டடத்தை பள்ளிவாசல் என அறிவித்து தொழுகையில் ஈடுபட ஆரம்பித்ததாகவும் கூறினர். உடனடியாக இந்த விவகாரம் குறித்து தமிழக அரசிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனையடுத்து நீதிமன்றத்தை நாடினோம். நீதிமன்றம் அந்த கட்டடத்தை அகற்ற உத்தரவிட்டது. ஆனாலும் தமிழக அரசு அந்த கட்டடத்தை இதுவரை அகற்றவில்லை. இதனால், மகாலட்சுமி நகர் பகுதியில் இன்று வரை பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது. எனவே, அரசால் அகற்ற முடியாத அந்த கட்டடத்தை அகற்றிட இந்து முன்னணியிடம் உதவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.