கோவாவின் தலேகாவ் நகரில் பா.ஜ.க தொண்டர்களிடம் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘காங்கிரஸ் பாரதத்தை ஆண்டபோது, அது ஒரு சிரிக்கவைக்கும் கூட்டணியாக இருந்தது. அதில் ஒவ்வொரு அமைச்சரும் தங்களை பிரதமராக கருதினர். ஆனால் உதவியற்ற பிரதமர் மன்மோகன் சிங்கை யாரும் பிரதமராக நினைத்துகூட பார்க்கவில்லை.
இப்போது நீங்கள் நமது பாரதத்தின் பாஸ்போர்ட்டை வெளிநாடுகளில் காட்டும்போது, வெளிநாட்டு அதிகாரிகள் புன்னகைத்து, நீங்கள் மோடியின் தேசத்தில் இருந்து வருகிறீர்களா என்று கேட்கிறார்கள். உலக அளவில் நமது பாரதத்தின் மதிப்பை அதிகரிக்கும் வேலையை மோடி செய்துள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பதவியை விட்டு வெளியேறும்போது பாரதம் 11 வது இடத்தில் இருந்தது. மன்மோகனின் இயல்புக்கு ஏற்ப அது காங்கிரஸ் ஆட்சியில் ஒரு இடம்கூட முன்னேறவில்லை. ஆனால், பாரதம் தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது. தற்போது இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சிப்பவர்களுக்கு தகுந்த பதில் அளிக்கப்படுகிறது. முன்னதாக காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் ஊடுருவல் நடந்தது. ஆனால், அதற்கு எந்த எதிர்ப்பும் காட்டப்பட்டதில்லை’ என கூறினார்.