பொதுவாக பாஸ்போர்ட்டுக்கு ஒருவர் விண்ணப்பிக்கும் போது அவர் மீது வழக்குகள் ஏதேனும் பதிவாகியிருக்கின்றதா என்று அராயப்படும். தற்போது, உத்தரகண்ட் காவல்துறை டி.ஜி.பி., பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் ஆன்லைன் செயல்பாடுகளையும் ஆராயப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவது பெருகி வருகிறது. அதனை தடுக்க விண்ணப்பதாரர்களின் ஆன்லைன் நடத்தைகள் ஆராயப்பட வேண்டும். புதிதாக எதையும் அறிமுகப்படுத்தவில்லை. தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் யாருக்கும் பாஸ்போர்ட் தரக்கூடாது என ஏற்கனவே உள்ள விதிமுறைக்கு ஆதரவாக மட்டுமே பேசியுள்ளேன். அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ள தேச விரோத நடவடிக்கைகளுக்கு ஒரு போலீஸ் அதிகாரி என்ற முறையில் நான் எதிராக நிற்கிறேன். சமூக ஊடகங்களின் பெருகி வரும் தவறான நடத்தைகளை தடுக்கவும், பயனர்கள் செய்தி அனுப்பும் போது அதிக பொறுப்புடன் இருக்கவும் இந்த நடவடிக்கை உதவும்’ என கூறியுள்ளார்.