கேரளாவில் கோழிக்கோடு அருகே வடகராவில் உள்ள ‘கேர்ரெஃப்ரெஷ்’ என்ற ஹைப்பர் மார்க்கெட்டில், பாகிஸ்தானுக்கு ஆதரவான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பலூன்களை விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனது குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பலூன் பாக்கெட்டுகளை வாங்கிய அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால், காவல்துறை இதனை மெத்தனமாக விசாரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அறிந்த பா.ஜ.க தொண்டர்கள் அந்த வணிக நிறுவனத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து பேசிய சூப்பர் மார்க்கெட்டின் நிர்வாக இயக்குனர் அஜீர், தான் குற்றமற்றவர், மும்பையில் உள்ள சப்ளையர் ஒருவரிடமிருந்து பொருட்கள் வந்தது, அது சீனாவிலிருந்து தருவிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய பலூன்களை திரும்பப் பெற்றுவிட்டோம் என கூறியுள்ளார். கேரளாவிலும், பாரதத்தின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற பலூன்கள் விற்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஜூலையில், காஷ்மீரில் இதே போன்ற பலூன்கள் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது பறக்கவிடப்பட்டன. சில இடங்களில் பலூன்களில், பாகிஸ்தானுக்கு ஆதரவான வாசகங்கள், முகமது அலி ஜின்னாவின் புகைப்படம் இருப்பது கண்டறியப்பட்டது.