திரவ மருத்துவ ஆக்சிஜனை 161 டேங்கர்களில் சுமார் 2,511 மெட்ரிக் டன் அளவிற்கு இந்திய ரயில்வே கொண்டு சேர்த்துள்ளது. மகாராஷ்டிரா – 174 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசம் – 689, மத்தியப் பிரதேசம் – 190, டில்லி – 1,053, ஹரியானா – 259, தெலங்கானா 123 மெட்ரிக் டன்கள் என நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் மூலமாக இந்திய ரயில்வே மிக விரைவாக கொண்டு சேர்த்துள்ளது. மேலும் பல டேங்கர்கள் தற்போது பயணித்துக் கொண்டுள்ளன என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.