ஜெர்மனியில் உள்ள கொலோன் கத்தோலிக்க திருச்சபையில் இளம் சிறுவர்களுக்கு கொடூரமான பாலியல் துன்புறுத்தல்கள் நடந்தது குறித்து ‘டெய்லி பீஸ்ட்’ என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணையின் போது, சிறுவர்களுக்கு கத்தோலிக்க திருச்சபையில் நடந்த பாலியல் கொடுமைகள் குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 1960, 1970களுக்கு இடையில் ஜெர்மனி, பெயரில் ஒரு கான்வென்ட்டை நடத்திய கன்னியாஸ்திரிகள் ஆதரவற்ற சிறுவர்களை வணிகர்களுக்கும் மதகுருக்களுக்கு “வாடகைக்கு” கொடுத்துள்ளனர். அவர்கள் அந்த குழந்தைகளிடம் பாலியல் வன்கொடுமை செய்தனர். பாதிக்கப்பட்ட 175 குழந்தைகளில் பெரும்பாலானோர் 8 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். இருபது ஆண்டுகள் இந்த வன்கொடுமை நடந்துள்ளது. இதற்காக குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை அவர்கள் வேண்டுமென்றே தடுத்துள்ளனர். இது குறித்த ரகசிய ஆவணங்கள் பத்திரிக்கையாளர்களிடம் கசிந்துள்ளதை அடுத்து இந்த விவகாரங்கள் வெளியாகியுள்ளன.