வீடுகளில் ஆர்.சி.டி பொருத்த உத்தரவு

மின் சாதனங்களை இயக்கும் போது, ஷாக் அடித்தால், ரெசிடுயல் கரன்ட் டிவைஸ் (ஆர்.சி.டி) என்ற சாதனம் தானாகவே மின் வினியோகத்தை துண்டிக்கும். பின், பழுதான சாதனத்தை மின் இணைப்பில் இருந்து விலக்கி ஆர்.சி.டியின் ஸ்விட்சை இயக்கி மீண்டும் மின்சாரத்தை பயன்படுத்தலாம். இது தற்போது சில வீடுகளில் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக மின் இணைப்பு கோரும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் இந்த ஆர்.சி.டி அமைப்பை நிறுவ வேண்டும். இந்த உயிர் காக்கும் சாதனத்தை கட்டடத்தில் பொருத்தாதவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட மாட்டாது என, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஆர்.சி.டியின் மின் கசிவை உணரும் திறன் 30 மில்லி ஆம்பியருக்கு மிகாமல் இருக்க வேண்டும். 10 கிலோ வாட்டிற்கு மேற்பட்ட மின் சாதனங்களை பொருத்தி இருக்கும் அங்காடிகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகளில் மின் இணைப்பு துவங்கும் இடத்தில் 300 மில்லி ஆம்பியர் அளவிற்கான மின் கசிவை உணரும் திறன்கொண்டதாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.