ஹரியானா மாநிலத்தில் டெல்லியை ஒட்டி அமைந்துள்ள குருகிராம் பகுதியில், சமீப காலமாக அப்பகுதி முஸ்லிம்கள், அங்குள்ள சீக்கிய வழிப்பாட்டுத் தலங்கள், பொது இடங்களில் தொழுகை செய்ய தொடர்ந்து முயன்று வருகின்றனர். இதனை அங்குள்ள ஹிந்து அமைப்புகளும், அப்பகுதியை சேர்ந்த ஹிந்துக்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக, அங்கு விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை தொழுகைக்காக, முஸ்லிம்கள் அடித்து காயப்படுத்தி விரட்டினர். இதனையடுத்து ஹிந்துக்கள் அப்பகுதியில், ஹோமங்களை நடத்தி போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், மீண்டும் பொது இடங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து தொழுகை நடத்த முஸ்லிம்கள் முயற்சிக்கின்றனர். டிசம்பர் 10க்கு பிறகு பொது இடங்களில் அவர்கள் தொழுகை செய்தால் அங்கு போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி ஹிந்துக்கள் வெளிப்ப்டையாக அறிவித்து உள்ளனர். காவல்துறை ஆணையர் யாஷ் கர்க், சட்டம் ஒழுங்கை காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.