கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் மக்களின் மருத்துவ தேவையை முழுமை செய்யவும், மருத்துவமனைகளில் தேவையற்ற கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் மத்திய அரசு கொண்டுவந்த திட்டம் இ.சஞ்சீவனி என்ற தொலைதூர மருத்துவம். இந்த இ சஞ்சீவனி முயற்சி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போதுவரை, 1.2 கோடிக்கும் அதிகமான மருத்துவ ஆலோசனைகளை அளித்துள்ளது. அதாவது தினசரி 90 ஆயிரம் பேர் இ.சஞ்சீவனி மூலம் பயன் அடைந்து வருகின்றனர். இ.சஞ்சீவனியை பயன்படுத்துவதில் 37 லட்சம் பயனாளர்களுடன் ஆந்திரா முதல் இடத்திலும் 22 லட்சம் பயனாளர்களுடன் கர்நாடகா 2ம் இடத்திலும் 15 லட்சம் பயனாளர்களுடன் தமிழகம் 3ம் இடத்திலும் உள்ளது. கொரோனா மூன்றாம் அலை போன்ற எதிர்பாராத நிகழ்வுகளை கையாளும் விதத்தில் ஒரு நாளைக்கு 5 லட்சம் மருத்துவ ஆலோசனைகளை வழங்க ஏதுவாக முன்னதாகவே திட்டமிட்டு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இ சஞ்சீவனியின் செயல்பாடுகளை அதிகரித்து வருகிறது.