கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்புகள்

தர்மபுரி மாவட்டம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் சொத்துகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள், நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, தர்மபுரி அட்சியர், ஆக்கிரமிப்புகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, பாப்பாரப்பட்டியில் வருவாய்துறை, அறநிலையத்துறை,நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அதிகாரிகள், இரண்டு நாட்களாக ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, இதுவரை 400 ஏக்கர் நில ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது என திருத்தொண்டர் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.