‘பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, வரி குறைப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும். இதன் விலையை ஜி.எஸ்.டி வரம்பில் கொண்டு வருவது குறித்து ஜி.எஸ்.டி கவுன்சில்தான் முடிவு செய்ய வேண்டும். பெட்ரோல் விலை உயர்வு எனக்கும் தர்மச்சங்கடமாகத்தான் உள்ளது. நான் ஒரு மத்திய அமைச்சர் மட்டுமே. என்னால், எதுவும் செய்ய முடியாது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்கின்றன’ என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.