நாடு முழுவதும் ஆயுதப் பயிற்சி முகாம்களை நடத்திய வழக்கில், பாரதத்தில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) பயங்கரவாத அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் இப்ராகிம் எம்.கே என்ற இப்ராஹிம் புதனத்தனிக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அமைப்பு, உடற்கல்வி வகுப்புகள் என்ற போர்வையில் ஆயுதப் பயிற்சி அளித்து வந்தது என்,ஐ,ஏ விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. என்.ஐ.ஏவின் செய்திக் குறிப்பில், இப்ராஹிம் மேம்பட்ட உடல் மற்றும் ஆயுதப் பயிற்சிக்கான பாடத்திட்டத்தைத் தயாரிப்பதில் ஈடுபட்டார், முகாம்களை மேற்பார்வையிட நாடு முழுவதும் பயணம் செய்துள்ளார். இதனையடுத்து, இப்ராஹிம் புதனத்தனி மீது ஐ.பி.சியின் 120பி, 121ஏ, 122, 153ஏ மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) பிரிவுகள் 13,18,18ஏ, மற்றும் 18பி ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.