பி.எப்.ஐ தொடர்பாளரை கைது செய்த என்.ஐ.ஏ

கடந்த ஆண்டு செப்டம்பரில், தடை செய்யப்பட்ட தீவிரவாத இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) தாமாக முன்வந்து பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக, கேரள உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் ஒருவரை கடந்த டிசம்பர் 31 அன்று என்.ஐ.ஏ கைது செய்தது. பி.எப்.ஐ அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் வேளையில், கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரை சவாரா பகுதி காவல்துறையின் உதவியுடன் என்.ஐ.ஏ கைது செய்து தற்போது அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. அந்த நபர் கேரளாவைச் சேர்ந்த முகமது சாதிக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததற்காக அவர் மீது என்.ஐ.ஏ நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் முன்பு பி.எப்.ஐ கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு பலவற்றில் பங்கு கொண்டுள்ளார். இது தொடர்பான அவரது பயண ஆவணங்களையும் என்.ஐ.ஏ கைப்பற்றியுள்ளது.