தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில், சமீபத்தில் புதிய மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களை நியமனம் செய்யப்பட்டனர். தற்போது, வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராமை நியமனம் செய்துள்ளார். முன்னதாக இதற்கு முன், கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் தலைவராக காயத்ரி ரகுராம் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.