உச்ச நீதிமன்ற புதிய நீதிபதிகள்

உச்சநீதிமன்றத்தில் மொத்த நீதிபதி பணியிடங்கள் 34. அதில், அண்மையில் 2 நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். தற்போது பணியில் இருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை 24. இதையடுத்து, நீதிபதி காலி பணியிடங்களை நிரப்ப, தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான கொலீஜியம் அமைப்பு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்‌.எம்‌. சுந்தரேஷ்‌, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபை ஸ்ரீநிவாஸ்‌ ஒகா, உட்பட 9 பேரின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இதில் 3 பெண் நீதிபதிகளும் அடங்குவர். உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள்‌ சங்கத்திலிருந்து நேரடி நியமன அடிப்படையில்‌, அரசு கூடுதல்‌ தலைமை வழக்கறிஞர் பி.எஸ்‌. நரசிம்மாவின்‌ பெயர்‌ பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொலிஜியத்தின் இப்பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவர்கள் விரைவில் பதவிற்பார்கள் என தெரிகிறது.