வாட்ஸ்அப்பில் புதிய வசதிகள்

முகநூலின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகமாக உள்ள மூன்று புதிய அம்சங்களை உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, ஏற்கனவே கடந்த ஆண்டு ‘டிஸப்பியரிங் மெசேஜ்’ அம்சத்தினை அறிமுகம் செய்திருந்தது வாட்ஸ்அப். இந்த வசதியின் மூலம் ஏழு நாட்களுக்குப் பிறகு சாட்டில் இருந்து செய்திகள் தானாக மறைந்துவிடும். இதன் அடுத்தகட்டமாக தற்போது அனைத்து சாட்களிலும் ‘டிஸப்பியரிங் மெசேஜை’ இயக்கும் ‘டிஸப்பியரிங் மோட்’ உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவதாக, ‘வியூ ஒன்ஸ்’ எனப்படும் ஒருமுறை மட்டும் பார்ப்பது. அதாவது நாம் அனுப்பும் செய்திகளை பெறும் நபர் ஒரு முறை பார்த்த பின் அது தானாகவே மறைந்துவிடும் வசதி. மூன்றாவதாக நீண்ட காலமாகவே பலரும் எதிர்பார்த்த ‘மல்டி டிவைஸ்’ வசதி அறிமுகமாக உள்ளது. இந்த ‘மல்டி டிவைஸ்’ வசதி கடந்த சில மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பப்ளிக் பீட்டாவில் இந்த வசதி வெளியாகும் என்ற தகவலை இந்த மார்க் தெரிவித்துள்ளார்.