‘தி நியூ அம்பர்லா என்டைட்டி கன்சோர்ட்டியம்’ நிறுவனம், சில்லரை பணப்பரிவர்த்தனைக்காக, மொபைல் போன் அடிப்படையிலான, ‘பாயின்ட் ஆப் சேல்’ சேவையை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது ‘டாடா சன்ஸ்’ நிறுவனத்தின் பின்னணியில் இயங்கும் ஒரு நிறுவனம். பணம் செலுத்த வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும், பாயின்ட் ஆப் சேல் மெஷினை பயன்படுத்தி பணத்தை எடுப்பதற்கு பதிலாக, அலைபேசியில், யுனிவர்செல் பேமென்ட் ஐ.டியைப் பயன்படுத்தி, பணபரிவர்த்தனையை மேற்கொள்ளும் முறையை உருவாக்கி வருகிறது இந்த நிறுவனம். இதனால் எந்த ஒரு போனிலிருந்தும் பணத்தை பெற்றுக் கொண்டுவிடலாம். இதனால் சிறிய அளவிலான பணப்பரிவர்த்தனைகளுக்கு ரொக்கப் பயன்பாடு குறையும். காகித ரசீது தேவையில்லை. அலைபேசியிலேயே ரசீது வந்துவிடும்.