நீலிக்கண்ணீர்

உத்தரபிரதேசம், கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய மருத்துவர் கபில் கானின் அலட்சியத்தால் ஆக்ஸிஜன் சப்ளை இன்றி 72 குழந்தைகள் இறந்தன. இதனையடுத்து, அவர் இடைநீக்கம் செய்து கைது செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, விடுவிக்கப்பட்டார். இவர் சி.ஏ.ஏ போராட்டத்தில் அரசு, உள்துறை அமைச்சருக்கு எதிராகவும் வன்முறையை ஆதரித்தும் பேசினார். தற்போது குற்றப்பின்னணி உடைய 81 பேர்களை உ.பி காவல்துறை வெளியிட்டது அதில் கபில் கானின் பெயரும் இடம்பெற்றிருந்தது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர் மீது ஏற்கனவே ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், காவல்துறையின் ஒரு நடவடிக்கையை தேவையில்லாமல் மத்திய மாநில அரசுகளுடன் சம்பந்தப்படுத்தியும் கானுக்கு ஆதரவாகவும் இடதுசாரிகள், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்கட்சிகள் நீலிக்கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட்டனர்.