தேசிய இளைஞர் திருவிழா

விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் திருவிழா புதுச்சேரியில் இன்று துவங்குகிறது. இதனை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று துவக்கி வைக்கிறார். சுதந்திரமடைந்த 75வருட அமிர்த மகோத்சவம், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இளைஞர் தின விழாவின் வெள்ளி விழா, மகாகவி பாரதியார் மறைந்த நூற்றாண்டு, ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்த நாள் ஆகியவை இந்த தேசிய விழாவில் ஒன்றாக சங்கமிக்கின்றன என்பது இதன் சிறப்பு.