மேற்கு வங்கம், நந்திகிராமில் பெண்களுக்கு எதிராக திருணமூல் குண்டர்கள் நடத்திய வன்முறைகள் குறித்த புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானது தேசமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தேசிய மகளிர் ஆணையம் (என்.சி.டபிள்யூ) இதனை தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது. இதன் தலைவர் ரேகா ஷர்மா இது குறித்து விசாரிக்க உடனடியாக ஒரு குழுவை மேற்கு வங்கத்திற்கு அனுப்பியுள்ளார். இக்குழு விசாரனையை ரேகா சர்மாவே நேரடியாக கண்காணிப்பார் என்று கூறப்படுகிறது.