லடாக், கல்வான் பள்ளத்தாக்கில் கடந்தாண்டு ஜூனில் நமது பாரத ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் நம் வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். நமது ராணுவத்தினரின் பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சீனா பலியானவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. ஓரிரு தினங்களுக்கு முன் பாரத ராணுவ உயரதிகாரி சீனா தரப்பில், அறுபதுக்கும் மேற்பட்டோர் ஸ்டிரெட்சரில் தூக்கி செல்லப்பட்டனர். அதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கூறினார். நாற்பதுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என ரஷ்ய ஊடகம் கூறியுள்ளது. இதற்கிடையே, தங்கள் பக்கம் நான்கு சீன ராணுவத்தினர் பலியானதாக சீனா தற்போது ஒப்புக்கொண்டுள்ளதாக சீன ஊடக அறிக்கைகளை மேற்கோளிட்டு நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.