ஹரியானா மாநிலம் மதுராவில் உள்ள நங்லா இஸ்லாம் நகரில் வசிக்கும் நவுமன் என்ற முஸ்லிம் நபர் ஓ.எல்.எக்ஸ்சில் மோசடி செய்தார். அவர் மீதான புகாரில் அவரை கைது செய்ய காவல்துறையினர் சென்றனர். அப்போது அந்த குற்றவாளியை காப்பாற்றுவதற்காக அப்பகுதியில் உள்ள முஸ்லிம்கள் காவல்துறையினரை கற்கள், செங்கற்கள், தடிகளால் மூர்கமாகத் தாக்கினர். ஒரு வீட்டின் கூரையில் இருந்தும் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஏராளமான காவலர்கள் காயமடைந்தனர். இந்த தகவலையடுத்து அருகிலுள்ள காவல் நிலையங்களில் இருந்து வந்த அதிகாரிகள் வந்து குற்றவாளிகளை கைது செய்வதற்காக வீடு வீடாக சோதனை நடத்தினர். இதில் அடையளம் தெரிந்த ஷோக்கீன், ரஷீத் கான், ஆரிஷ், தாரிஃப், ராபின், முஷ்டாக், ரிஸ்வான் உள்ளிட்ட 34 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகளை விடுவிக்க காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய பர்பினா, அமினா, மோஸ்மினா, ரெஹானா உள்ளிட்ட 9 பெண்கள் உட்பட 18 பேரை கைது செய்துள்ளதாக மதுரா நகர காவல்துறையினர் தெரிவித்தனர்.