மேற்கு வங்கத்தில், கன்னிங் (பூர்பா) தொகுதியில், திருணமூல் கட்சியை சேர்ந்த ஷௌகத் மொல்லா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் அங்கிருந்து சென்றபிறகு அங்கு கூடியிருந்த முஸ்லிம்களும் திருணமூல் கட்சியின் குண்டர்களும் இணைந்து தேர்தல் பாதுகாப்பில் ஈடுபட்ட சி.ஆர்.பி.எப் வீரர்களையும் பத்திரிகையாளர்களையும் கற்கள், தடிகள், கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கினர். வீரர்கள் கைகளில் லத்திகள் மட்டுமே இருந்தன. ஆனால், அங்கிருந்த ரௌடிகளிடம் பல பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதில் நிருபர் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வீரர்கள் தடியடி நடத்தி நிலைமையை சமாளித்தனர் என்றாலும் இதனை ஒரு பெரிய போராட்ட சூழ்நிலையாக மாற்ற வேண்டாம் என கருதி பின்வாங்கினர்.