காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் தனது எம்.பி பதவியை இழந்ததால் வெளிநாடு செல்வதற்கு பொதுமக்கள் பயன்படுத்தும் சாதாரண பாஸ்போர்ட் வழங்க சமீபத்தில் டெல்லி நீதிமன்றம் தடையில்லா சான்று வழங்கியது. அதன்படி ராகுலுக்கு சாதாரண பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதனையடுத்து ராகுல் அமெரிக்காவுக்கு கிளம்பினார். ஒரு வார பயணமாக சென்றுள்ள அமெரிக்கா ராகுல், சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன், நியூயார்க் ஆகிய நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டு உள்ளார். இந்நிலையில், ராகுலின் அமெரிக்கப் பயணத்திற்கு, முஸ்லிம் அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நியூயார்க்கில், ஜூன் 4ல், அமெரிக்காவில் வசிக்கும் பாரத வம்சாவளியினரை சந்தித்து பேச, ராகுல் திட்டமிட்டுள்ளார். ஜாவிட் சென்டரில் நடக்கவிருக்கும் இந்நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாட்டை, மஸ்ஜித் அல் வாலி அமைப்பைச் சேர்ந்த தஸீம் அன்சாரி; மஸ்ஜித் எம்.சி.எம்.சி., அமைப்பின் ஜாவித் சையத், ஹபீப் சித்திகி, மிர் காத்ரி; மஸ்ஜித் சதார் அமைப்பின் நசீர் சையத், அக்வில் முகமது, தரூல் இஸ்லா அமைப்பின் ஷாகின் கடீப், ஹசீர் காஸி ஆகியோர் செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.