மகாராஷ்டிர மாவட்டங்களில் ஹிந்து உள்ளிட்ட மற்ற மத சமூகத்தினர் மீதான முஸ்லிம்களின் தாக்குதல்கள் சமீப காலமாக தீவிரமடைந்துள்ளன. அவ்வகையில் மற்றொரு சம்பவமாக, மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய முஸ்லிம் கும்பல் ஒன்று ஹிந்து ஆண்களை கொடூரமாக தாக்கிய சம்பவம் அங்கு தலைப்புச் செய்தியாகியுள்ளது. தங்கள் சமூகத்தினர் அதிகமாக வாழும் பகுதியில் அவர்கள் சென்றபோது ஹாரன் அடித்ததற்காக அவர்களை அந்த வன்முறை கும்பல் தாக்கியது. இதனால் காயமடைந்த கோகுல் திகே, ரவீந்திர கடேகர், பாபாசாகேப் தோரட், ஜிதேந்திர ஷிண்டே, அஜய் தோரட், பாபாசாகேப் தோரட் மற்றும் கணேஷ் ககாட்வர் ஆகிய 8 பேர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஜோர்வ் கிராமத்தைச் சேர்ந்த அவர்கள் பணி நிமித்தமாக சங்கம்னேருக்கு பிக்கப் வேனில் சென்றனர். மாலையில் மீண்டும் தங்களது கிராமத்திற்கு திரும்பும் போது கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். அப்போது ஹாரன் அடித்தனர். இதையடுத்து அந்த முஸ்லிம் கும்பல், ஹாரன் அடித்தவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் குற்றம் சாட்டப்பட்ட அந்த வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் கைகளில் வாட்கள், கூர்மையான ஆயுதங்கள் மற்றும் கம்பி, கட்டைகளுடன் இத்தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலின் வீடியோக்கள் மற்றும் படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. இதையடுத்து ஹிந்து அமைப்பினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறை துணை ஆய்வாளர் நிவந்த் ஜாதவ், “ய்தில் சம்பந்தப்பட்ட யாரும் விடப்பட மாட்டார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ஜோர்வ் கிராமத்தில் பாதுகாப்புக்காக காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்” என கூறியுள்ளார்.