கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து தரப்பு மக்களும் அயோத்தி ஸ்ரீராமர் கோயில் கட்ட நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில், தி.மு.கவின் செஞ்சித் தொகுதி முஸ்லிம் எம்.எல்.ஏ. மஸ்தான் ஸ்ரீராமர் கோயிலுக்கு ரூ. 11,000 நிதி வழங்கியுள்ளார். இது மத நல்லிணக்கத்தை பேணும் நல்ல முயற்சி என்றாலும், ‘தமிழகத்தில் இரண்டு மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளதால், இவ்வளவு நாள் ஹிந்துக்களின் கடவுள்களையும் மத நம்பிக்கைகளையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் தி.மு.கவினர் தற்போது ஹிந்து வாக்குகளை குறிவைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்’ என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.