ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஹிந்துக்கள் பெருந்தன்மையால் பாதுகாப்பாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், முஸ்லிம்களோ கிறிஸ்தவர்களோ பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் ஹிந்துக்கள் உயிரைப் பணயம் வைத்தே வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் தெலங்கானாவில் சிவராத்திரியைக் கொண்டாட முயன்ற ஹிந்துக்கள்மீது இஸ்லாமியர்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
மார்ச் மாதம் 7ம் தேதி மஹா சிவராத்திரியைக் கொண்டாட ஹிந்துக்கள் ஆயுத்தமாகி வந்தனர். தெலுங்கானாவில் உள்ள பைன்ஸாவில் இஸ்லாமிய வெறியர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். ஹிந்துக்களை சரமாரியாகத் தாக்கினார்கள். பைன்ஸாவே போர்க்களமானது. எங்கு பார்த்தாலும் ரத்தச்சிதறல்கள். இவ்வளவு கொடூரங்கள் நிகழ்ந்த பிறகும் காவல்துறையின் கண்கள் திறக்கவில்லை.
கலவரத்தில் ஹிந்துக்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. இருசக்கர வாகனங் கள், ஆட்டோ ரிக்க்ஷாக்கள், கார்கள், வேன்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பைன்ஸாவில் 35 ஆண்டுகளுக்கு முன்பே மதக்கலவரம் நிகழ்ந்துள்ளது. 1984ல் ஹோலிக் கொண்டாட்டத்தின்போது ஹிந்துக்களை முஸ்லிம்கள் தடுத்துத் தாக்கினார்கள். இது மதக்கலவரமாக உருவெடுத்தது. 1989ல் விநாயகர் விஸர்ஜனத்தின்போது ஊர்வலமாகச் சென்ற ஹிந்துக்களை முஸ்லிம் வெறியர்கள் வழிமறித்துத் தாக்கினார்கள்.
2008ல் துர்க்கா தேவி விஸர்ஜனத்தின்போதும் ஹிந்துக்கள் தாக்கப்பட்டனர். பஞ்சேஷா மசூதி அருகே கொடூர வெறியாட்டம் நடந்தது. நூற்றுக்கணக்கான வீடுகளும் கடைகளும் சூறையாடப்பட்டன. 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஏராளமான ஹிந்துக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவின்றி, கிழிபடாத உடையின்றி, உறைவிடமின்றிப் பரிதவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
2020ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலையொட்டி மீண்டும் கலவரம் வெடித்தது. முஸ்லிம்கள் மூன்று தினங்கள் இஜ்திமாவைக் கொண்டாடுவது வழக்கம். நிறைவு நாளன்று ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் திரண்டிருந்தனர். மோட்டார் சைக்கிள்களில் சைலன்ஸர்கள் இல்லாமல் அதிக சப்தத்துடன் ஊர்வலமாகச் சென்றனர். வாகனங்களைத் தாறுமாறாக ஓட்டினர். இரவு 9 மணியளவில் 500க்கும் மேற்பட்டோர் திரண்டுவிட்டனர். வாகனங்கள் எரிக்கப்பட்டன. சரமாரியாகக் கற்கள் வீசப்பட்டன. ஹிந்துக்களின் வீடுகள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தீயை அணைக்கத் தீயணைப்பு வண்டிகள் விரைந்துவந்தன. ஆனால், முஸ்லிம் வெறியர்கள் தீயணைப்பு இயந்திரங்களில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர்க் குழாய்களை வெட்டி வீசினர். ஹிந்துக்களுக்குச் சொந்தமான 18 வீடுகள் எரிந்து சாம்பலாகிவிட்டனர்.
2020ம் ஆண்டு ஜனவரி மாதம் கலவரம் வெடித்தபோது பாஜக எம்.எல்.ஏ. ராஜாசிங், ”பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் செல்வேன். ஹிந்துக்களுக்கு ஆறுதல் கூறுவேன்” என்று குறிப்பிட்டார். உடனே போலீஸார் அவரை வீட்டுக்காவலில் வைத்துவிட்டனர். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியும் ஏ.ஐ.எம்.ஐ.எம். அமைப்பும் கூட்டாகச் சேர்ந்து முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. போலீஸாரும் இதற்கேற்பவே செயல்படுகின்றனர்.
இப்போது நடைபெற்ற நிகழ்வையடுத்து நிஜாமாபாத் பாஜக எம்.பி. அரவிந்த் தர்மபுரி சம்பவ இடத்துக்குச் சென்று ஹிந்துக்களுக்கு ஆறுதல் கூற விரும்பினார். உடனே போலீஸார் அவரையும் வீட்டுக்காவலில் வைப்பதாக அறிவித்துவிட்டனர். அதையும்மீறி அவர் பைன்ஸாவுக்குப் புறப்படத் தயாரானார். அவரைப் போலீஸார் துரத்தினர்.ஹைதராபாத்தில் அவரை நடுத்தெருவில் தடுத்து நிறுத்தி வீட்டுக்குத் திருப்பி அனுப்பிவிட்டனர்.
செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அரவிந்த் தர்மபுரி, ”தெலுங்கானா போலீஸார், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசின் அழுத்தத்துக்கு ஏற்ப செயல்படுகின்றனர். தெலுங்கானா அரசு ஏ.ஐ.எம்.ஐ.எம். அழுத்தத்துக்கு ஏற்ப செயல்படுகிறது. பைன்ஸா நகர சபையை முகமது ஜபீர் அகமது குடும்பத்தினர்தான் நெடுங்காலமாகக் கட்டுப்படுத்தி வருகின்றனர்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது முகமது ஜபீர் அகமது நகரசபையின் துணைத்தலைவராக உள்ளார். கட்டப்பஞ்சாயத்து செய்து ஹிந்துக்களின் நிலங்களை அபகரிப்பதுதான் அவரது முழுநேரத்தொழில் என்று அரவிந்த் தர்மபுரி குற்றம் சாட்டியுள்ளார். நகரசபையின் தலைவர் சபியா பேஹம், மாவட்டக் கலெக்டர் முஸாரப் பரூக்கி ஆகியோரும் ஹிந்துக்கள்மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட உறுதுணையாக செயல் பட்டுள்ளனர். ஹிந்துக்கள் தவறைத் தட்டிக்கேட்டால் சமூக ஊடகங்களில் பொய்ச் செய்தியைப் பரப்பிக் கலவரத்தை ஏற்படுத்துவதே முஸ்லிம் விஷமிகளின் செயல்பாடு என்பதையும் அரவிந்த் தர்மபுரி எடுத்துரைத்துள்ளார். அடில்லாபாத் பாஜக எம்.பி. சோயம் பாபு ராவையும் சம்பவ இடத்துக்குச் செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை.
சம்பவம் நடைபெற்ற பகுதிக்குச் செல்ல ஹிந்து மதச் சார்புடைய எந்தத் தலைவரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. முதல்வர் சந்திரசேகர ராவ் அங்கு செல்லவே இல்லை. ஏ.ஐ.எம்.ஐ.எம் நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் தங்குதடையின்றி நடமாடி வருகின்றனர். போலீஸாரின் நடவடிக்கை பாரபட்சமாக உள்ளது. தெலங்கானா அரசு ஹிந்துக்களுக்கு விரோதமானது. அப்பாவிகளுக்கு இழைக்கப் பட்டுள்ள அநீதியை எதிர்த்து பாஜக போராடும். கயவர்களுக்கு கேடயமாக விளங்கும் சந்திரசேகர ராவின் அரசை வீழ்த்தும்வரை ஓயமாட்டோம் என்று மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் சூளுரைத்துள்ளார்.