முஸ்லிம் பெரும்பான்மை நாடான பாகிஸ்தானில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையினர் அனைவரும் அனுபவிக்கும் தொல்லைகள் சொல்லிமாளாது. பாகிஸ்தான், கராச்சியில் உள்ள சோப்ராஜ் மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றுகிறார் தபிதா நசீர் கில் எனும் கிறிஸ்தவ செவிலியர். அங்கு பணியாற்றும் ஒரு சக முஸ்லிம் ஊழியர், நோயாளியிடம் இருந்து பணம் பெறுவதை கண்டு அதை கண்டித்துள்ளார். எனவே அந்த சக உழியர், தபிதா நோயாளிகளை கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக பொய் கூறி, ஒரு பெரிய கும்பலுடன் இணைந்து தபிதாவை மருத்துவ மனையிலேயே கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கியுள்ளார்.