குழந்தையை மணந்த எம்.பி

பாகிஸ்தான், பலூசிஸ்தானைச் சேர்ந்த 14 வயது சிறுமியை ஜாமியத் உலமா-இ-இஸ்லாத்தின் தலைவரும், தேசிய சட்டமன்ற உறுப்பினருமான மௌலானா சலாவுதீன் அயூபி திருமணம் செய்துள்ளார். பாகிஸ்தான், சித்ராலில் உள்ள பெண்களின் நலனுக்காக பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று காவல்துறையில் இது குறித்து புகாரளித்தது. இதனையடுத்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ‘பாகிஸ்தானில் 12 முதல் 25 வயதுக்குட்பட்ட 1000 கிறிஸ்தவ, சீக்கிய மற்றும் இந்து பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் கடத்தப்பட்டு கட்டாய திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். முஸ்லிமாக மாற நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று ‘அசோசியேட்டட் பிரஸ்’ அறிக்கை தெரிவிக்கிறது.