ஜெய்ப்பூரை சேர்ந்த அஜய் குமார் கர்க் என்பவருக்கு சிறு வயதில் ஏற்பட்ட விபத்தால் காது கேளாமல், வாய் பேச முடியாமல் போனது. தனது விடாமுயற்சியால் ஓவியரக மாறிய இவர், தாம் வரைந்த ஓவியம் ஒன்றை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தார். இதனை பார்த்த மோடி, ‘மனிதனின் உணர்வுகளுக்கு அற்புதமான வடிவம் கொடுப்பது கலை. இது படைப்புத்திறனுடன் ஆர்வத்தை இணைக்கிறது. ஓவியத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பும் நுணுக்கமும் உங்களது ஓவியத்தில் பிரதிபலிக்கிறது. வாழ்க்கையில் தடைகள் சிரமங்களை சந்தித்து வரும் பலருக்கு உங்கள் வழ்க்கை ஊக்கம் கொடுப்பதாக உள்ளது. உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்’ என கடிதம் எழுதியுள்ளார். இதனால், மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார் ஓவியர் அஜய் குமார் கர்க். இவர், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல ஓவிய கண்காட்சிகளில் பங்கேற்றுள்ளார் என்பதுடன் ஜெய்பூரில், காது கேளாத வாய் பேசமுடியாத குழந்தைகளுக்கு இலவசமாக ஓவியப் பயிற்சியளித்து வருகிறார்.