தமிழகத்தில் ரூ. 8,126 கோடி திட்டங்களை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும் ‘தேவேந்திர குல வேளாளர்’ என, அழைப்பதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்தது குறித்து, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு, பா.ம.க, தேவேந்திர குல வேளாளர் இளைஞர் நல சங்க கூட்டமைப்பு போன்ற கட்சிகளும் அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. தங்களின் 80 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பிரதமர் மோடிக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். ‘பிரதமர் மோடியை, எங்கள் குலசாமியாக, தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் வணங்குவர்’ என தேவேந்திர குல வோளர்கள் இளைஞர் நல சங்க கூட்டமைப்பு நிறுவனர் தாஸ் பாண்டியன் கூறியுள்ளார். மேலும், ‘ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம்’ எனும் பாரதியாரின் பாடலையும், ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்’ என்ற ஓளவையாரின் பாடலையும் கையில் துண்டு சீட்டில்லாமல் மிகத்தெளிவாக சுட்டிக்காட்டிய பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் தங்கள் பாராட்டினை தெரிவித்து வருகின்றனர்.