சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மலையக இணையதளத்தில், பிரதமர் நரேந்திர மோடி, கோண்ட் ஓவியம், தோடா சால்வை உள்ளிட்ட சில பொருட்களை வாங்கினார். இதனையடுத்து, `டிரைப்ஸ் இந்தியா’ என்ற பெயரிலான இந்த இணையதளத்தை பார்வையிடுவோர் மற்றும் பொருட்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு 2 ஆயிரம் பேர் மட்டுமே இந்த இணையதளத்தை பார்த்து வந்த சூழலில் தற்போது இந்த இணையதளத்தை பார்ப்போர் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மகளிர் தினத்தன்று மட்டும் ரூ. 1.50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. தங்களது உழைப்பை பிரதமர் அங்கீகரித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பிரதமர் வாங்கியதால், தங்களது தயாரிப்பு உலக அளவில் பிரபலமடைந்துள்ளது என மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். முன்னதாக பிரதமர் மோடி சென்ற இடங்களான கேதார்நாத்தில் உள்ள ருத்ரா குகை, மாமல்லபுரம் போன்ற இடங்கள் பிரபலமடைந்து, அதிக மக்கள் வரும் இடங்களாக மாறியுள்ளது. மோடி கூறிய பிறகு காதி, சுதேசி பொருட்களின் விற்பனை அதிகரித்தது போன்றவை குறிப்பிடத்தக்கது.