மனிப்பூரில் கடந்த 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.க வெற்றி பெற்று முதல்வர் பிரேன் சிங் தலைமையில் ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில், வாங்கேய் சட்டசபை தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஒக்ராம் ஹென்றி சிங் வெற்றி பெற்று பின்னர், அவர் பா.ஜ.கவில் இணைந்தார். இதையடுத்து, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், ஹென்றி தாக்கல் செய்த வேட்பு மனுவில், பல முக்கிய தகவல்களை அவர் மறைத்துள்ளதாக, அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஒக்ராம் ஹென்றி சிங் தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவரது மனைவி, குடும்ப உறுப்பினர்கள், கல்வி தகுதி, அவர் மீதுள்ள குற்ற வழக்குகள் குறித்த விபரங்களை தெரிவிக்கவில்லை. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அப்பட்டமான விதி மீறல். எனவே, ஹென்றி வெற்றி பெற்றது செல்லாது என, நீதிமன்றம் அறிவித்தது. இவருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் பிடித்த, பா.ஜக, வேட்பாளர் ஈராபாட் சிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.