பாரதத்தில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் மதமாற்றம் செய்யும் சுவிசேஷ மிஷனரிகளின் உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி, வற்புறுத்தல் போன்றவை மூலம் சட்டவிரோதமாக, பொதுமக்களை கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றுகின்றனர். இதற்காக அவர்கள் வெளிநாட்டு நிதிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வகையில், டார்ஜிலிங்கை சேர்ந்த ‘அலபெல்லா பாய்ஸ் ஹோம்’ எனும் அமைப்பு, சட்டவிரோத மதமாற்றங்களுக்காக 6.56 கோடி ரூபாயை எப்.சி.ஆர்.ஏ விதிகளை மீறி மோசடியாக வெளிநாட்டு நிதிகளை பெற்றதாக, சட்ட உரிமைகள் ஆய்வகம் (எல்.ஆர்.ஓ), குற்றம் சாட்டியுள்ளது.