ஒடிசா கடற்கரையில் விரைவு எதிர்வினை மேற்பரப்பு ஏவுகணை (QRSAM) அமைப்பின் ஆறு ஏவுகணை சோதனைகளை பாரதம் வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்திய இராணுவத்தின் மதிப்பீட்டு சோதனைகளின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நீண்ட தூர நடுத்தர உயரம், குறுகிய தூர உயரம், உயரமான இலக்கு, குறைந்த ரேடார் தெரிவு உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் ஆயுத அமைப்புகளின் திறனை மதிப்பிடுவதற்காகவும் பல்வேறு வகையான வான்வழி அச்சுறுத்தல்களைப் பிரதிபலிக்கும் அதிவேக வான்வழி இலக்குகளுக்கு எதிராகவும் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகளின் போது, அதிநவீன வழிகாட்டுதல், டெலிமெட்ரி, ரேடார் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட கட்டுப்பாட்டு நோக்கங்களும் பூர்த்தி செய்யப்பட்டன என . பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) தெரிவித்துள்ளது. டி.ஆர்.டி.ஓ மற்றும் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.