நீண்ட தூரம் பயணித்து எதிரி ஏவுகணையை விண்ணிலேயே இடைமறித்துத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட, ஏவுகணையை பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை, ஒடிசா சந்திப்பூர் ஒருங்கிணைந்த ஆய்வு மையத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த சோதனைக்கு பாராட்டு தெரிவித்தார்.