கேரளாவின் செர்த்தலாவில் உள்ள ‘மாருத்தோர்வட்டம் பகுதியில், கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கும் தொண்டில் சேவாபாரதி ஈடுபட்டது. அதில் பென்னி என்பவரின் 11 வயது மகளான கிறிஸ்டி ஆர்வமுடன் கலந்துகொண்டார். அதனால் அந்த கிறிஸ்தவ குடும்பமும் சேவாபாரதியுடன் இணைந்து ஆர்வமுடன் செயல்பட்டனர். முன்னதாக, பென்னி, கம்யூனிச கட்சியில் முன்பு இருந்தவர். பின்னர் ஏற்பட்ட சில மனக்கசப்பு சம்பவங்களால் விலகினார். இதனால் ஆத்திரமுற்ற அக்கட்சியின் குண்டர்கள், அந்த குடும்பத்தினரை எச்சரிக்கும் விதமாக, அக்குழந்தை செல்லமாக வளர்த்துவந்த 25 புறாக்களை கொடூரமாகக் கொன்றுவிட்டனர். அவர்களால் தங்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என அஞ்சிய அக்குடும்பத்தினர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை கேள்விப்பட்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் அவர்களின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறினர்.